Friday, November 28, 2008

த‌மி‌ழ்

நீ முதல் முறை என்னை தலை சாய்த்து
கடைக் கண்ணால் பார்த்த போது
என் உள்ளத்தில் முள் பாய்ந்தது.
அதை இன்னும் எடுக்கவில்லை
முள்ளை முள்ளால் தானே எடுக்க வேண்டும்
எங்கே இன்னொரு முறை பார்

விக்கல் எடுக்கும் போதெல்லாம்
நீ என்னை நினைப்பதாய்
எண்ணிக்கொள்வேன்...
ஆனால் நா‌ன் உன்னை நினைக்கும் போதெல்லாம்
உனக்கு விக்கினால்
24 ம‌ணி நேரமும்
இடைவெளி இருக்காதே....?

அவன் -
பேரகந்தைக்காரன்;
அவனை இனி எண்ணுவதில்லை எ‌ன்று
இதயத்தை இரும்பாக்கினேன்....
ஆனா‌ல் அதையும் கவர்ந்து கொண்டான்
பொல்லாத விழிகள் அவ‌ன் காந்த விழிகள்

கண்ணாரக் கண்டு
காதாரக் கேட்டு
மனதார பார்த்து
காலார நடந்து
வாயாரப் பேசி
மயங்கினேன்
உன்னிடம்

என்னை பரிசோதித்த
மரு‌த்துவ‌ர்க‌ள், என்
இதயதில் ஒட்டை என்றனர்.
ஆனா‌ல், அவர்களுக்கு
எப்படித் தெரியும் -
அன்பே, அதுதா‌ன்
நீ தப்பிச்சென்ற வழி எ‌ன்று

இடறி விழுந்தேன்
என்னால்
எழ முடிந்தது -
காரணம் அங்கே
பல் மட்டுமே உடைந்திருந்தது
காதலால்
இடறி விழுந்தேன்
என்னால்
எழ முடியவில்லை
காரணம் அங்கே
இதயம் அல்லவோ உடைந்திருந்தது

தயவு செய்து என்னை இன்றைக்கு
நேசியுங்கள். எனெனில்.....
நாளை நா‌ன் இவ்வுலகில்
இருப்பேன் எ‌ன்று என்ன நிச்சயம்!


தாய்மை :

உன் முகத்தை, உன் புன்னகையை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் நான் மறுபடியும் பிறக்கிறேன். தாய்மை ஒரு மறு பிறவி என்பது இதுதானோ?

பொழுது விடியும் பொழுது போகும். யுகமாய் கழிந்தன ஒவ்வொரு நாளும்.இன்று பொழுது போதவில்லை உன்னை அனுபவிக்க!! யாருக்கு நன்றி செலுத்த இந்த மாற்றத்திற்கு???

பட்டை தீட்டிய வைரம் தான் ஜொலிக்கும். என் மனதை  தீட்டி இப்பொழுது என் வாழ்க்கைக்கு மெருகூட்ட வந்த வைரமே!! எவ்வளவு அர்த்தங்கள் உன் ஜொலிக்கும் புன்னகையில்!!!

மாயம், மாயாவி - எல்லாம் கதைகளில் படித்ததுண்டு. என்னையே மறக்க செய்யும் அளவுக்கு மாய வித்தையை  கற்றது எப்போது?? உனக்கு இன்னும் பெயர் கூட வைக்கவில்லையே!!!!

No comments: